ஒளியே எழிலே எம் தாயே மன்னாரே!
பல்லவி
ஒளியே எழிலே எம் தாயே மன்னாரே
உறவிலே உயிராகி இறைஈன்ற கொடைகொண்ட
ஒளியே எழிலே எம் தாயே மன்னாரே
மணியோசை வாங்கோசை விண்ணதிர சுடரேற்றி
நான்மதமும் துதிபாடும் தாயே எம் மன்னாரே
ஒளியே எழிலே எம் தாயே மன்னாரே
சரணம் 1
வங்கக்கடல் மீனும் வாகான நெல் வயலும்
கங்சம் நிறை முப்பெரு வாவியின் நீர்வளமும்
முத்து விளைந்திடவே எண்ணெய் வளமும் பெருகி
பட்சியினம் பசிதீர பறந்துவரும் மன்னாரே
அருவியாறும் தொங்கு ஆற்றுப்பாலமும்
மருவிட சுற்றுலாவின் மையமெனப் புகழ்சேர்க்கும்
அல்லிராணி கோட்டையுடன் இராமர் அணையும் பெருக்கும்
ஒளியே எழிலே எம் தாயே மன்னாரே
சரணம் 2
தேனைச் சொரிமலர் பொழில்கள் காணும்
கட்டுக்கரை குளத்தின் வான்பாயும் அழகும்
முக்கனிச் சோலை வளர் பனை தென்னையும்
வானுயர்ந்த தலைமன்னார் கலங்கரை விளக்கமும்
கல்வியின் உயர்வளமும் களிப்புற்றோங்கிடவே
ஈழத்தின் பெரும் தீவாய் என்றுமே விளங்கிடும்
வளம்நிறை தம்பபன்னி வளர்நிறை ஊரே
ஒளியே எழிலே எம் தாயே மன்னாரே
சரணம் 3
வாசாப்பின் தனிப்பெருமை மிகு மன்னார் பாங்கும்
ஆய கலை பரம்பரை சேர் சித்தர் தம் மருத்துவம்
கட்டிளமை குன்றாதோர் காற்பந்து விளையாட்டும்
பேர்சொல்லும் ஆசியத்தின் தலைவாசல் மன்னாரே
மன்னார் நகர் மாந்தை மடு முசலியுடன்
நானாட்டானும் அடங்கவே நற்பிரிவு ஐந்துடனே
வேற்றுமை தகர்த்திடுவோம் அன்பென்னும் ஆயுதத்தால்
உறவே உயிரே எம் தாயே மன்னாரே!