Print
26views

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மன்னார் மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்டான்லி டிமெல் அவர்களின் ஏற்பாட்டில் இன்று(30.05.2023) காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், றிஸாட் பதியுத்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் , வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு, அவற்றின் தற்போதைய நிலைமைகள் ஆராயப்பட்டன.
மேலும் மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் வீதி, போக்குவரத்து, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கல்வி, சிவில் நிர்வாகம், வீட்டுத்திட்டம், மின்சாரம், காணி, பொது உட்கட்டமைப்பு வசதிகள், நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக் கலந்துரையாடலில் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாணசபை மற்றும் மன்னார்மாவட்ட திணைக்களத்தலைவர்கள , வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
345231079 688404249761417 88868087939119127 n 350356019 286682353698947 82419692415490170 n
 
 
 
 
348672912 1300197737600826 2422205770743079259 n
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba