Print
21views

    மன்னார் மாட்ட அரசாங்க அதிபரின் மணிவிழாவும் நந்தினி அம்மா மலர் வெளியீட்டு நிகழ்வும்

 

dss

 மன்னார் மாட்ட அரசாங்க அதிபருக்கு மணிவிழாவும் நந்தினி அம்மா மலர் வெளியீட்டு நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (25.08.2023) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பரம்தாமன் (நிர்வாகம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, சர்வமத தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அரசாங்க அதிபராகிய இவர் தனது ஆரம்ப, உயர் கல்வியினை வங்காலை புனித ஆனாள் மகாவித்தியாலயத்தில் கற்றார். இவர் பாடசாலையில் கல்வி கற்ற காலங்களில் சிறந்த பக்தியும் ஒழுக்கமும் கல்வியும் ஆடல் பாடல் விளையாட்டு உடற்பயிற்சி துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் தனது ஆர்வமான கற்றல் மூலம் பல்கலைக்கழகம் தெரிவாகி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைப்பட்டதாரியாக பட்டம் பெற்று 1986 இல் வெளியேறினார்.
முதல் நியமனத்தை 1989.01.20இல் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்திலும் பின்னர் கண்டி திகண ரஜவல மகா வித்தியாலயத்திலும் பின்னர் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலப்பகுதியிலேயே ஆசிரியரான திரு. ஸ்ரான்லி டி மெல் (அதிபர், புனித ஆனாள் மகா வித்தியாலயம், வங்காலை) அவர்களை கரம்பிடித்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். இதன் பலனாக செல்வன். வோட்ஸன் (அமரர்), செல்வி. அருள் ஷPபா (பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோரை பிள்ளைச் செல்வங்களாகப் பெற்றுக்கொண்டார். இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்திபெற்று 1995.04.03இல் இலங்கை நிர்வாக சேவையில் முதல் நியமனத்தைப் பெற்றார். அதன் பின்னர் இலங்கை நிர்வாக சேவையின் புகுமுகப் பயிற்சியினை ஒரு வருட காலத்துள் முடித்துக்கொண்டு இலங்கை நிர்வாக சேவையின் முதல் பணிப்பொறுப்பினை மன்னார் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளராக 1996.04.01ஆம் திகதி பொறுப்பேற்றார். 2005.05.17 வரை சிறப்பாக தனது கடமையினை புரிந்துள்ளார்.
உதவி ஆணையாளராக கடமையாற்றிய வேளையில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்த பதினொரு கமநல சேவை நிலையங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று பறையனாலங்குள சோதனை முகாமில் சோதனைக்குட்படுத்திய பின்னர் லொறிகள் மூலம் உரிய காலத்தில் பசளை, மருந்து விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் விவசாய வீதிகள், பல குளங்கள் திருத்தப்பட்டதுடன் கழிவு நீர் வாய்க்கால்கள் பல அமைக்கப்பட்டன. கறுக்காய் குளத்தில் அமைந்துள்ள பெரிய களஞ்சியசாலை மற்றும் அரிசி ஆலை என்பனவும் கட்டப்பட்டன. உழவு இயந்திரங்கள், லொறிகள் ஆகியவை விவசாய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2005.05.18 முதல் 2012.07.29 வரையான 07 வருடங்கள் மன்னார் நகரத்தின் பிரதேச செயலாளராக அரும்பணியாற்றினார். அதனை தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபராக மன்னார் மாவட்ட செயலகத்தில் பதவியில் இருந்தபோது (2012.07.30-2018.02.15 வரை) கூடுதலான பணிகளை ஆற்றியுள்ளார். பின்னர் மேலதிக செயலாளர் மலைநாடு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணிபுரிந்து மலைநாட்டு மக்களுக்கு இந்திய வீட்டுத் திட்டங்களை வழங்கியது முக்கியமாகும். அதனை தொடர்ந்து பிரதி பிரதம செயலாளராக வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் பணியாற்றினார். அப்போது பல பயிற்சிகளை வழங்கியதுடன் வட மாகாணத்தின் சகல ஆளணித் தரவுகளையும் சீர் செய்தார்.
அதன் பின்னர் அரச அதிபராக மன்னார் மாவட்ட செயலகத்தில் 2020.11.16இல் இருந்து 2023.08.25 வரை பணியாற்றினார். கொரோனா தொற்றுக்கெதிரான நடவடிக்கைகளின் போது சுகாதாரப் பகுதியினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தொற்று நீக்கல் செயற்பாடுகளின் காரணமாக மாவட்டத்தில் குறைந்தளவிலான நோயாளர்கள் இணங்காணப்பட்டனர். கொரோனா தொற்றுக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கான வழி அனுமதிகள் வழங்கி உரிய நேரத்தில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாது சேவையாற்றினார்.
எரிபொருள் பற்றாக்குறையின் போது கிடைத்த வரையறுக்கப்பட்ட எரிபொருளை குடும்பப் பதிவு அட்டைகள் மூலம் சிறப்பான முறையில் வழங்கி எரிபொருள் பற்றாக்குறையினை தீர்த்து வைத்தார். முதியோருக்கான இரண்டு ஓய்வு இல்லங்களை அமைத்தார். அத்துடன் முதன்முறையாக மன்னார் மாவட்டத்துக்கென மாவட்ட கீதம் ஒன்றினை உருவாக்கி அதனை அனைத்து கலைஞர்களின் துணையுடன் சிறப்பான விதத்தில் வெளியீடு செய்தார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான வர்த்தக கண்காட்சியினை வெகு சிறப்பாக நடாத்தினார். சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் இரண்டினை அமைத்து சிறுவர்களின் தேவையினை பூர்த்தி செய்தார். நானாட்டானில் ஆரோக்கிய உணவகம் ஒன்றினையும் திறந்து வைத்தார். மன்னார் மாவட்ட கலைஞர்கள் பலரை கௌரவித்து வாழும் போதே வாழ்த்தினார். அத்துடன் பறவைகள் அவதானிப்புக் கோபுரம் 02 திறந்து வைக்கப்பட்டது. 2022 நவம்பர் மாதத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களது மன்னார் வருகையின் போது அந்நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினார். 03 வெளிநாட்டு தூதுவர்களின் மன்னார் வருகையின் போது மாவட்டத்தின் நிலைமையினை எடுத்துக் கூறினார்.
இவ்வாறு தனது சேவை காலத்தை மிக சிறப்பான முறையில் சேவையாற்றிய எமது மதிப்புக்குரிய அரசாங்க அதிபர் அவர்களுக்கு மாவட்ட செயலகம் சார்பில் நன்றியும், அவரது இனிவரும் காலம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
1 2
 
3 4
 
5
 
 
 
 
 
+66
 
 
所有心情:
Rtn R. Robin、Thevarasa Ketheeswaran和其他75位用户
 
FaLang translation system by Faboba