மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற, பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களின் பன்முகச் சந்தை கிரிசாலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது (2024-03-12). இதனை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் ஐயா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பெண்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள், கைவினைப் பொருட்கள், சுவையூட்டி வகைகள், பசுமை உற்பத்திகள் பொருட்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டன. இந் நிகழ்வில், வணிக ஆலோசனைகள் மற்றும் தொழில் செய்திகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கிரிசாலிஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் இந் நிகழ்ச்சியில் பெண்கள் தலைமையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.