மன்னாரில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மன்னார் நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த நடமாடும் சேவை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் 20.04.2024ம் திகதி இடம்பெற்றது.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உட்பட திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


