Print
23views
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உயர் திரு. கனகசாபாபதி .கனகேஸ்வரன் அவர்கள் ஜோசப்வாஸ் நகருக்கு விஜயம்.
இன்றைய தினம் 25/4/2024/வியாழக்கிழமை கிராமமக்களது கோரிக்கைக்கு அமைய ஜோசப்வாஸ்நகருக்கான தமது விஜயத்தை எமது மன்னார் மாவட்ட அரச அதிபர் உயர் திரு .கனகசபாபதி. கனகேஸ்வரன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
வருகைதந்த அரச அதிபர் அவர்களை பங்குத்தந்தை அருட்பணி இராஜநாயகம் அடிகளார் கைலாகை கொடுத்து வரவேற்றதை தொடர்ந்து புனித வின்சன்றி போல் முன்பள்ளி சிறார்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி செயலாளர் திரு.டிலுசன் பயஸ் அவர்களும், மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குணர் அருட்பணி விக்டர் சோசை அடிகளாரும், பள்ளிமுனை பங்குத்தந்தை அருட்பணி #டெனிக்கலிஸ்ரஸ் அடிகளாரும், கற்கடந்தகுளம் பங்குத்தை அருட்பணி #டெஸ்மன் #அஞ்சலோ அடிகளாரும், மன்னார் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திவாகரி அவர்களும், கிராமத்தில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகஸ்தர்களான கிராம அலுவலர் ,சமூர்த்தி உத்தியோகஸ்தர், அபிவிருத்தி அலுவலர் மற்றும் ஊடகவியலாளர் றோஜினி அவர்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#மேலும் வருகை தந்திருந்த அரச அதிபரினால் எமது கிராமத்தின் ஆயர் இராயப்பு யோசப்பு விளையாட்டு மைதானம் ,ஆலய வளாகம் ,கிராமத்தின் வீதிகள், உள்ளக வீதிகள், முதியோர் சங்கம் போன்றவை பார்வையிடப்பட்டன.
 
01v102v1
03v104v1
FaLang translation system by Faboba