பள்ளிமுனை இறங்கு துறையினை ஆழப்படுத்துவதற்கான செயற் கூட்டம் ( 17.05.2024 )மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் காணி அவர்களின் தலைமையில் , கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்,உதவி பணிப்பாளர் கடற்றொழில் திணைக்களம், திட்ட பொறியியலாளர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர், சுற்றுச் சூழல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மன்னார் நகர சபையின் செயலாளர் மற்றும் பள்ளிமுனை மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்றலுடன் நடைபெற்றது.
கூட்டத்தின் பின் பள்ளிமுனை கடற்கரைப் பகுதிக்கு இணைந்த கள விஜயமும் மேற்கொள்ளப்பட்டது.



