ஜீன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று (5-6-2023)காலை எட்டு மணியளவில் கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்வுக்கான 300 கண்டல் தாவரங்களை டினோஸா கண்டல் தாவரப் பள்ளி வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கனகரெத்தினம் திலீபன் சுற்றுச்சூழல் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


