Print
25views
முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலக நிதி அனுசரணையில் 3.5 மில்லியன் பெருமதியான முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலை பெருமாள் கட்டு கிராம சேவகப்பிரிவில் 07.06.2024 அன்றுவெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு டெ.க அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர், முன்னாள் அரசாங்க அதிபர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், முதியோர்களின் ஆடல், பாடல், பிரதேச செயலாளரின் உரை, சிறப்பு விருந்தினரின் உரை, பிரதமர் விருந்தினரின் உரை இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் அருட்தந்தை, முன்னாள் மாவட்ட செயலாளர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல், மாவட்டச் செயலக பொறியாளர், கிராம அலுவலர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
elders3 elders2
 
elders4 elders5
 
elders6 elders7
 
elders8 elders9
 
elders10 elders11
FaLang translation system by Faboba