கிராம அலுவலர்களுக்கான பயிற்சிகள் 10.06.2024 அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 கிராம அலுவலர்களுக்கான 03 மாதகால பயிற்சி இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நாள் நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அதிபர்கள்( நிர்வாகம் மற்றும் காணி), பிரதம உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர் உதவி மாவட்ட செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பயிலுனர் கிராம அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

