வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வானது கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் (09) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் அடையாளபடுத்தபட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் , அதற்கு உள்ளடங்கலான தீர்வுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளுடன் முன்னோக்கி செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் வடக்கு மாகண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் , மன்னார் மாவட்ட அரச அதிபர் , பிரதேச செயலர்கள் , உதவி பிரதேச செயலர்கள் , பல் துறை சார் அரச உயர் அலுவலர்கள் ,கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட திட்ட இணைப்பாளர், பால்நிலை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் , மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ,மாவட்ட மற்றும் பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிராந்திய உள்ளூராட்சி திணைக்கள அலுவலர்கள் , பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் , மன்னார் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


