ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடி குதூகலிப்போம் எனும் தொனிப்பொருளில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் வழிப்படுத்துதலிலும் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2024.07.19 அன்று 9 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.
மேலும் நிகழ்வின் வரவேற்புரை நலன்புரிச் சங்கத் தலைவரும் கணக்காளருமான திரு செல்வகுமார் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து விசேட உரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும், சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் சேர்ந்த ஆசிரியரினால் ஆடி பிறப்பு சம்பந்தமான விசேட உரை , ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை எனும் பாடல் மாவட்ட செயலக அதிகாரிகளாலும் பாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆடிக் கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.




