மன்னார் மாவட்டத்தில் காடழிப்பானது சில இடங்களில் நடைபெற்று வருகின்றது. அண்மையில் ஆத்தி மோட்டை பகுதியில் ஒதுக்கு காட்டினுள் 30 ஏக்கர் நிலம் சட்டவிரோதமான முறையில் துப்பரவாக்கப்பட்டுள்ளது. அதே போன்று கட்டுகரை குளப்பகுதியில் வன ஜீவராசி திணைக்களத்துக்கு சொந்தமான மேய்ச்சல் தரை நிலத்துக்கு என அடையாளம் காணப்பட்ட பகுதியில் சட்டவிரோமான முறையில் துப்பரவாக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் சம்பந்தபட்ட திணைக்களங்களின் ஆசிர்வாதத்துடன் இடம் பெறுவதாக தெரிகின்றது. மேற்படி விடயம் தெரிந்தவுடனேயே சம்பந்தபட்ட இரு திணைக்களங்களுக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்களே தவிர இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலகத்தின் மீது சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எம்மால் இவ்விடயங்கள் தொடர்பாக சம்பந்த பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க முடியுமே தவிர சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இல்லை. சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தினை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வழங்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டு வருமாறு கோரப்படவுள்ளது.

