Print
39views

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் வருகின்ற வயல் நிலங்களுக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான 2024-2025 கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(2024-10-18) உயிலங்குளத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது விவசாய குழு,அதனுடன் இணைந்த 30 விவசாய அமைப்புகள் அழைக்கப்பட்டு,குறித்த கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது விவசாயத்துடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன் போது முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக பயிர்ச் செய்கைக்கு உத்தேசிக்கப்பட்ட நிலப்பரப்பாக இவ்வருடம் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலம் இம்முறை பெரும்போக நெற்செய்கை காக பயன்படுத்தப்பட உள்ளது.
அதற்கு அமைவாக இவ்வருட பெரும்போக விவசாய தயார் படுத்தலுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி (27-10-2024) முதலாவது நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.விதைப்பு இறுதித் திகதியாக 4-11-2024 திகதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.41/2 மாத நெற்களுக்கு விதைப்பினை 7-11-2024 திகதிக்கு முன்பாகவும், 3 தொடக்கம் 3 1/2 மாத நெல்லினங்கள் 26-11-2024 க்கு முன்பாகவும் 2 1/2 மாத நெல்லினத்தை விதைக்க விரும்புபவர்கள் 26-11-2024 க்கு முன்பாகவும் விதைப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 27-11-2024 தொடக்கம் கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாயம் செய்வோர் தேவைப்படுகிறவர்களுக்கு நீர் விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதே போன்று அறுவடை ஆரம்பிக்கப் படுகின்ற திகதியாக 11-03-2025 ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்போக நெற் செய்கையை கருத்தில் கொண்டு கால் நடைகளை கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கு அமைவாக எதிர்வரும் 20 ஆம் திகதி (20-10-2024) தொடக்கம் 22-04-2025 வரையான காலப்பகுதிக்குள் பெரும்போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிக்குள் கால்நடைகளை விட வேண்டாம் என்று கால்நடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்போக செய்கைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை மீறி அத்துமீறி நீர்ப்பாசன குளங்களுக்கு சொந்தமான குளக்காணிகளில் அத்து மீறி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடந்த முறை அமுல் படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள விவசாயிகள் தமது பெரும்போக நெற் செய்கையினை முன்னெடுக்குமாறு இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
01pon
FaLang translation system by Faboba