Print
28views
மன்னார் மாவட்டத்தின் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கலாச்சார விழா
=====================================
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் (2024-10-29) காலை 10 மணி அளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் கலாச்சார விழா நடைபெற்றது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்டச் செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டி.சி.அரவிந்தராஜ்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் கே.சிவசம்பு,வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயசீலன் ஞானராஜ், பொருளியல் பேராசிரியர் நேவில் மொறாயஸ்,தாவரவியல் பேராசிரியர் சந்திரகாந்தா மகேந்திர நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருந்தினர்களுக்கு மன்னர் மாவட்ட செயலக வளாகத் மாலை அணிவிக்கப்பட்டு நகர சபைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இ‌ந் நிகழ்வில் அனைத்து மத தலைவர்களும் மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து களிகம்பு, கூத்து வழி நடனம், கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, நடனம், நாட்டுக்கூத்து உள்ளிட்ட நிகழ்வுகள் பிரதேசச் செயலாளர் பிரிவுகள் ஊடாக அரங்கேற்றப்பட்டது. இதில் மன்னார் மாவட்ட முன்னால் அரசாங்க அதிபர் கௌரவிக்கப்பட்டதுடன் 5 பிரதேச சபைகளையும் சேர்ந்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வின் சிறப்பம்சமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயசீலன் ஞானராஜ்,பொருளியல் பேராசிரியர் நேவில் மொறாயஸ்,தாவரவியல் பேராசிரியர் சந்திரகாந்தா மகேந்திர நாதன் ஆகிய பேராசிரியர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
cul01cul02
 
cul03cul 4
FaLang translation system by Faboba