Print
13views
2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்று (2025 -01-01) மாவட்ட செயலாளர் திரு க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முதலாவதாக தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் உத்தியோகத்தர்கள் நேரலை ஊடக இணைந்திருந்தனர்.
அரசாங்க அதிபர் அரசாங்கத்தின் புதுமையான திட்டங்களான வறுமையை தணித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருத்துக்களை உள்ளடக்கிய சிறப்புரை ஆற்றி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதில் மேலதிக மாவட்ட செயலாளர்கள் , பதவிநிலை அலுவலர்கள், அலுவலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்கள்.
 
firstday 1 firstday2
firstday3 firstday4
 
firstday5 firstday6
 
firstday7 firstday8
 
firstday10 firstday9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba