7.2.2025 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் மேலும் 6.2.2025 ஆவது கலந்துரையாடலின் தொடர்ச்சியாக மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டுகோள் கடிதத்திற்கு அமைய அதாவது மன்னார் தீவுக்கான நீரியல் ஆய்வு அறிக்கை ஒன்று செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த செயற்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் தேசிய நீரியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அதனுடன் இணைந்து செயல்படுகின்ற தலைமன்னார் இலங்கை கடற்படையினால்
அது தொடர்பான குறித்த நீரியல் ஆய்வு மற்றும் சமவுயர கோட்டு வரைபடம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து முகமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர். கலந்து கொண்டனர்.

