Print
3views
மன்னார் மாவட்ட பெரிய மடு கிராமத்தின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் வடமாகாண அபிவிருத்தியிலும் மன்னார் மாவட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்திலும் முன்னின்று செயற்படும் அதிகாரிகள் உடன் பெரியமடு கிராமத்தின் வீதிகள், குளங்கள், மருத்துவ செயற்பாடுகள் மற்றும் மேலதிக விடையங்கள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கிராமத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
21.02.2025 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் பெரியமடு கிராமத்தின் பொதுமக்கள் சந்திப்பில் அனைத்து அதிகாரிகள் முன்னிலையில் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கூட்டம் நிறைவு பெற்றது.
 
gov1 gov3
gov4 gov5
 
gov6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba