Print
3views
மன்னார் மடு தம்பனைக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு மடு பிரதேசச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பூசை உபகரணங்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பூசை உபகரணங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் உத்தியோக கையளித்தார். இந்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் . கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வவுனியா குருமன்காடு காளியம்மன் கோவில் மற்றும் வவுனியா கந்தசுவாமி ஆலயம் ஆகியன மேற்படி பூசை உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தன கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தார்.
 
jobfair16 jobfair17
 
jobfair18 jobfair19
 
jobfair20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba