Print
16views

மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வு
மன்னாரில் மீன்பிடி மற்றும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக, செயற்கைக்கால் பொருத்தும் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் தலமையில் 16 பயனாளிகளுக்காக 21 மார்ச் 2025 அன்று கச்சேரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, திரு. பற்றிக்ஸ் ஜனன் (புனர்வாழ்வு சிகிச்சையாளர்) அவர்களால் Centre For Handicap - Kandy நிறுவனத்தின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக வழங்கப்பட்ட செயற்கைக்கால்களின் மொத்த பெறுமதி ரூ. 2,500,000 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த விழாவில் மன்னார் மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தினர் மற்றும் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு (தேனி) ஆகிய அமைப்புகள் முக்கிய பங்காற்றின. இவை, செயற்கைக்கால் அளவெடுக்கும் செயல்முறைகள், நடை பயிற்சிகளுக்கான ஒழுங்குகளையும், நிகழ்விற்கான இட வசதிகளை ஏற்படுத்தியமை சிறப்பு சேர்த்தது.
இந்த நிகழ்ச்சி, சமூக நலனுக்கான அணுகுமுறையையும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியையும் வலியுறுத்தியது.
 
01zx102
0304
FaLang translation system by Faboba