கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் மறை பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய ரீதியிலான வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி பாடல் போட்டி 2025ம் ஆண்டு சித்திரை 5ம் திகதி மன்னார் மறைக்கல்வி நடு நிலையத்தில் நடைபெற்றது.இதில் கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.
இதில் முதலாம் இடம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முருங்கன் புனித யாகப்பர் ஆலய மாணவர்கள்
மூன்றாம் இடம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் வாஸ் நகர் மாணவர்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி A.ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.சதுரி பின்ரோ, மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனர் அருட்தந்தை றொக்சன் அடிகளார், சமூகத் தொடர்பு மையத்தின் இயக்குனர் அருட்தந்தை லக்ஸ்ரன் அடிகளார் ஆகியோர் பரிசளித்து கெளரவித்தனர்.



