Print
29views
தூய்மையான தேசத்தை நோக்கி என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள “தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029” (09.04.25) அன்று மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கான உள்ளக அலுவல்கள் பிரிவானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களினால் இன்று(11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
01f102
0304
FaLang translation system by Faboba