மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் மற்றும் யாழ் பேதனா வைத்தியசாலையும் இணைந்து நடத்திய பாடசாலை பிள்ளைகளின் கண் பார்வை குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் திட்டம் தொடர்பாக 26.05.2025 அன்று மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் D.வினோதரன், விரிவுரையாளர் வைத்தியர் கண் சத்திர சிகிச்சை நிபுணர் M.மலரவன் மற்றும் கண் வைத்தியர்கள் இணைந்து மன்னார் மற்றும் மடு கல்வி வளையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு மன்னார் மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

