இக் கலந்துரையாடலில் தொழிலாளர் கூலி, வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், ஒப்பந்தக்காரர்களுக்கான விலை நிர்ணயங்களை இன்று இக்குழு ஊடாக தீர்மானங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன.
இக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையிலே அரச ஒப்பந்த வேலைகளை செய்து கொள்ள முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், கணக்காளர், பணிமனைகளின் தலைவர்கள், பணிமனைகளின் பொறியியலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

