இந்த விழாவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர்இ.நித்தியானந்தன் சிறப்பு விருந்தினராகவும் ,கலாபூசணம் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் மற்றும் கலாபூசணம் அந்தோனி கிறிஸ்ரியான் பீரிஸ் ஆகியோர் கெளரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்
இவர்களுடன்,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய அலுவலர்கள் கலைஞர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்
ஆரம்பத்தில் விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக மாலை அணிவித்து தமிழின்னியம் ,குதிரை அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய கலைநிகழ்வுகள் சகிதம் வரவேற்கப்பட்டனர்
தொடர்ந்து கலைநிகழ்வுகள் கலைஞர் கெளரவிப்பு ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.



