மன்னார் மாவட்ட செயலகத்தின் புதிதாக பதவி உயர்வு பெற்று மேலதிக மாவட்ட செயலாளர் காணி திரு கீ.பீட் நிஜாகரன் அவர்களும், (முன்னாள் மடு பிரதேச செயலாளர்) மற்றும் மேலதிக மாவட்ட செயலாளராக நிர்வாகம் திரு ம.பிரதீப் அவர்களும், (முன்னாள் மன்னார் நகர பிரதேச செயலாளர்) இருவரும் தமது கடமை பொறுப்பை மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக 30.07.2025 காலை 9.00 மணியளவில் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இன் நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மடு மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், மாவட்ட செயலக அலுவலர்கள் மற்றும் மடு , மன்னார் நகர பிரதேச செயலக அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.




