மேற்படி நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பிரதேச செயலக அலுவலர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டும் அவர்களது சேவைகள் தொடர்பான சாதக பாதக நிலைகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் பொது மக்கள் தொடர்பான சேவைகள் வழங்கும் முறைகள் மற்றும் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
அனைத்து அலுவலர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தின் தேவை தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டதுடன் அலுவலகத்தில் நடைமுறையில் உள்ள நவீன தொழில்நுட்ப செயற்பாடுகள் காட்சி படுத்தப்பட்டது.


