2025 ம் ஆண்டின் உலக குடியிருப்பு தின நிகழ்வு மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. ர். ஹலீம்தீன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மக்களின் வாழ்விட உரிமை தொடர்பான கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதோடு இவ்வருடம் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட 50 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


