The Management Club (TMC) இன் ஏற்பாட்டில் "Empowering Growth, Insightful Innovations" என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வடக்கு முதலீட்டு உச்சி மாநாட்டை Northern Investment Summit (NIS 2026) முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (18.11.2025) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, தொழில்துறை, சுற்றுலாத்துறை, சேவைத் துறை உட்பட முக்கிய துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் The Management Club இன் திட்டத் தலைவர் திரு. இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, National Enterprise Development Authority இன் தலைவர் திரு.லக்ஷ்மன் அபேசேகர மற்றும் The Management Club இன் நிருவாகிகள் மாவட்ட செயலக அலுவலர்கள் பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

