விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு, வடக்கு மாகாணம் நடாத்திய சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்கள் கெளரவிப்பு விழா - 2025 இன்று காலை 10.00 மணி அளவில் நானாட்டான் பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது
இன்றைய விழாவை திரு. சண்முகராஜா சிவஸ்ரீ (செயலாளர் விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம்) அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்,பிரதம விருந்தினர்களாக கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் (கௌரவ ஆளுநர், வடக்கு மாகாணம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெகதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக திருமதி. தனுஜா முருகேசன் (பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்), திரு. கனகசபாபதி கனகேஸ்வரன் (அரசாங்க அதிபர், மன்னார் மாவட்டம்) அவர்களும் கலந்து சிறப்பித்தார். மேலும் வடக்கு மாகாண அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறந்த விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கேடயம் சான்றிதழ் மற்றும் பணம் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

