Print
20views

டிட்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை இரண்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் மடுக்கரையில் இருந்து கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு மத்திய நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பின்பு அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் மீண்டும் அங்கு சென்ற வேளையில் உயிரிழந்திருப்பதாகவும், மற்றையவர் தனது விவசாய நிலத்தின் பாதுகாப்பு கருதி குஞ்சிக் குளம் கிராமத்தில் இருந்து சென்ற வேளையில் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன் வயலுக்குச் சென்ற ஏனையவர்கள் குஞ்சிக் குளம் கிராமத்துக்கு பாதுகாப்பாக திரும்பி இருக்கின்றனர்

FaLang translation system by Faboba