பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை.
. வடகிழக்கு பருவ மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
.எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களில் ( சீதுவிநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு) வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
. கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்தத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் தங்கள் கால்நடைகளை பராமரிக்கவும்.
. தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை களை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.