“Clean Sri Lanka” தேசிய திட்டத்துடன் இணைந்து “தேசத்தை கட்டி எழுப்பும் வளமான கிராமம்” மாவட்ட மட்ட சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் தொடக்க வைபவம் இன்று (16.03.2026) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் பிரதேச செயலகப் பிரிவின் சிறுத்தோப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட உதயபுரம் கிராமத்தின் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மன்னார் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை கௌரவ தவிசாளர் அவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மத தலைவர்கள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

