மன்னார் மாவட்ட சிறுவர்கள், பெண்கள் அபிவிருத்தி, SGBV, உளசமூக மற்றும் போதை தடுப்பு குழு மன்ற முதலாம் காலாண்டு ஒன்றுகூடல் நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் போதை பொருட்கள் ஊடக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான கூடிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும் கட்டாய கல்வி தொடர்பான விசேட கவனம் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் குறித்த சில பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார துறை அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

