மன்னார் மாவட்ட 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் (ஏப்ரல் 29 இடம்பெற்ற கூட்டத்தின் இரண்டாம் பகுதி) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (12) செவ்வாய் கிழமை காலை 9.00 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் ,கடற்படை அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

