Print
73views
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்களைச் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய அணிகளுக்கிடையில் வருடாந்திரமாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான (Season 05) கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 11.07.2026 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய மன்னார் மாவட்ட அணி, இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
இந்நிலையில், வெற்றியைப் பெற்ற மன்னார் மாவட்ட அணியினருக்கு இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளரின் தலைமையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது, வெற்றியைப் பெற்ற வீரர்களுக்கு மாவட்டச் செயலாளர் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்ததுடன், எதிர்கால போட்டிகளிலும் இதேபோன்ற அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் பங்கேற்று மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு வெற்றியாளர்களை பாராட்டி கௌரவித்தனர்.
 
01lok 02jpg
 
03 04
FaLang translation system by Faboba