வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் நகரம் பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டு விழா இன்று மன்னார் நகர மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது
மன்னார் நகரம் பிரதேச செயலாளர் காந்திராசா காந்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் துறைசார் விருந்தினராக மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ நித்தியானந்தனும், கலைசார் விருந்தினராக கலைக்குரிசில் எஸ் ஏ உதயனும் கலந்து கொண்டனர்
பாரம்பரிய முறைப்படி விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் கலைநிகழ்வுகள்,கலைஞர் கெளரவிப்பு, கலை பண்பாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன
இந்த விழாவில் திருமதி அமல உற்பவி லீனஸ்( சிறுகதை)திருமதி ஸ்ரிபன் சிசில் பெனோ(இசை) திரு எமிலியான் ஸ்ரிபன் சுகந்தரூபன் கூஞ்ஞ (நாடகம்) , திருமதி மேரி நிருபா பஸ்ரியன் (ஓவியம்) ஆகியோர் கலைச்செம்மல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்

