சங்குப்பிட்டி பாலத்தில் திருத்தப்பணிகள் காரணமாக,
07.10.2026 முதல் 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படும்
பேருந்து சேவை விபரம்
07.10.2026 காலை 9.00 மணி வரை மட்டும் சங்குப்பிட்டி பாலம் ஊடாக வழமை போன்று சேவை நடைபெறும்.
அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் மாற்று வழித்தடத்தில் இயங்கும்.
மாற்று வழித்தடம்
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துகள் பூநகரி - பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம்சென்று மீண்டும் அதே வழியில் சேவையில் ஈடுபடும்.
அதேபோன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் செல்லும் பேருந்துகள் பரந்தன் _ பூநகரி ஊடாக மன்னார் சென்று மீண்டும் அதே வழியில் சேவையில் ஈடுபடும்.
இதனால் பயண தூரம் சுமார் *50 KM* வரை அதிகரிக்கும்.
பயண தூரம் அதிகரிப்பதால் பேருந்து கட்டணத்தில் பின்வருமாறு மாற்றம் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். SLTB மற்றும் தனியார் பேருந்துகள் வழமையான நேர அட்டவணையின்படி தொடர்ந்து சேவையில் இருக்கும்.
ஆகவே பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி
