Print
54views
மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்திற்கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களுக்கும் பயிர்ச்செய்கை காலநிலைக்கும் ஏற்ற தரமான விதை நெல்லை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த புதிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விதை விற்பனை நிலையத்தின் ஊடாக விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் வகைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான ஆதரவையும் வழங்கும் நோக்கில் நிறுவனம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதை விற்பனை நிலையம் நேற்று நடைபெற்ற வைபவ நிகழ்வொன்றின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், விவசாயத் திணைக்கள பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்ததுடன், புதிய நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் விவசாயத்துறையை வலுப்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு தேவையான விதைகளை அருகாமையில் பெற்றுக்கொள்ள இந்த புதிய நிலையம் ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
seeds sp op
FaLang translation system by Faboba