மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம அலுவலர்களுக்கான மூன்று மாதகால பயிற்சி நெறி, இன்று (12.10.2026) காலை 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பயிற்சி நெறியின் ஊடாகப் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம அலுவலர்களின் நிர்வாகத் திறன்களையும், பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதற்கான ஆற்றல்களையும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், புதிதாக நியமிக்கப்பட்ட கிராம அலுவலர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
