மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக, அரச துறைகளில் காணப்படும் லஞ்சம், ஊழல் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளில் ஏற்படும் காலதாமதங்களை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில் மாவட்ட செயலகங்களில் 'உள்விவகார அலகு' (Internal Affairs Unit) அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களில் நிறுவப்பட்ட உள்விவகார அலகுகள் தற்போது மிகவும் திறம்படவும் சிறப்பாகவும் செயற்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்குச் வேகமான, நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையான சேவைகளை உறுதிசெய்வதில் இவ்வலகுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த விசேட காணொளிப்பதிவு ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.