வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில், வீதி விபத்துகளைத் தடுப்பது தொடர்பான விசேட முன்வைப்பு (Presentation) நாளை சூம் (Zoom) செயலி ஊடாக நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் வீதி பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு தொடர்பான முக்கியமான தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளதால், இதில் ஆர்வமுள்ள பொதுமக்கள், சாரதிகள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
