Print
198views
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட சிறுவர் தின நிகழ்வு, உதவி அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு, மனநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான சிறுவர் நட்புச் சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
விழிப்புணர்வு நடைபவனி, விழிப்புணர்வு நாடகம் மற்றும் மாணவர்களுக்கான பரிசு வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள் நிகழ்வின் சிறப்பம்சங்களாக அமைந்தன.
“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்”
ஒவ்வொரு சிறுவரும் அன்பு, பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மகிழ்ச்சியுடன் வளர்வதற்கான சூழலை உருவாக்குவது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பங்காளி நிறுவனங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
 
 20261  20263  20262
 20264  20265  20266
FaLang translation system by Faboba