மன்னார் மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வு இன்று (20) மாவட்ட செயலகத்தின் தரைத்தளத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது, பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.


