Print
73views
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சிலாவத்துறை, அரிப்பு மற்றும் அருவி ஆறு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களைச் சிறப்பு முகாமைத்துவப் பிரதேசங்களாக (SMA) அறிவிப்பதற்கான முகாமைத்துவத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சி பட்டறை இன்று (21.10.2026) மன்னார் JULI Reception மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், துறைசார் உயர் அதிகாரிகள், கிராம அலுவலர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரையோர இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பாக இப்பயிற்சியில் கவனம் செலுத்தப்பட்டது.
 
 12026  2  3
 
 4
FaLang translation system by Faboba