Print
89views
வவுனியா பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் பீடத்தை (Faculty of Marine Science) அமைப்பதற்காக மன்னார், விடத்தல்தீவு பகுதியில் 111 ஏக்கர் காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிலத்தில் பீடத்தை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
​இப்பீடத்தை அமைப்பதற்கான காணி, மாவட்ட செயலகத்தால் நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன் வரைபடமாக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் காணி பயன்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பரிந்துரைகளும் பெறப்பட்டிருந்தன. இருப்பினும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக் கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட அப்பகுதி கட்டுக்கரை குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் பகுதியில் அமைந்திருப்பதாகக் கருத்து முன்வைக்கப்பட்டது.
​இதனைக் கருத்திற் கொண்டு, இது குறித்து சாத்தியக்கூறு ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கை இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில், அப்பகுதியில் தூண்கள் அமைத்து உயர்த்தப்பட்ட கட்டடக் கட்டமைப்பின் (Elevation Method) அடிப்படையில் பல்கலைக்கழகத்தைப் பாசனப் பாதிப்புகளின்றி அமைக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
​இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இப்பல்கலைக்கழகப் பீடத்தை விரைவாக அமைப்பதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரத்தைத் (Cabinet Paper) தயாரித்து, திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது."
 
Faculty of Marine Science uni of vavuniya202611  Faculty of Marine Science uni of vavuniya20261
FaLang translation system by Faboba