Print
151views
கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை ஒழிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தல்
பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், மக்களின் தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றுக்கு முன்னுரிமை வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வலுவூட்டல் செயலமர்வு இன்று (28) மன்னார் மாவட்டத்தின் நானாட்டன் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக அபிவிருத்திச் சபையினரை வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜகதீஸ்வரன், மாவட்டச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இச்செயலமர்வின் போது, பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் நடைமுறைகள், சமூகத்தின் உண்மையான தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் கிடைக்கப்பெறும் நிதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டது.
கிராமிய மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, வறுமையைக் குறைப்பதுடன், நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதில் சமூக அபிவிருத்திச் சபைகளின் பங்களிப்பு முக்கியமானது என வலியுறுத்தப்பட்டது.
மேலும், கிராம மட்டத்தில் மக்களின் பங்களிப்புடன் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து, அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரஜாசக்தி அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிராமிய மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, சமூகப் பங்களிப்புடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான முக்கியமான நடவடிக்கையாக இவ்விழிப்புணர்வு செயலமர்வு அமைந்தது.
 
 2261  20262  20263
 
 20264  20266
FaLang translation system by Faboba