Print
102views
மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் திருக்கரங்களால் சாதனையாளர்கள் கௌரவிப்பு
​மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் (தேசிய பாடசாலை) மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஈட்டிய குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடும் பெருவிழா இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவித்தார்.
​சர்வதேச கணிதப் போட்டிகள், தேசிய மட்ட தடகளப் போட்டிகள், அகில இலங்கைப் பாடசாலை கால்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் சர்வதேச கரத்தே போட்டிகள் எனப் பல்வேறு தளங்களில் பதக்கங்களையும் அங்கீகாரங்களையும் வென்று, மன்னார் மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இளம் சாதனையாளர்களை அரசாங்க அதிபர் பாராட்டி, நினைவுச் சின்னங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்கள்.
​நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்கள், மாணவர்கள் தங்களது இந்த வெற்றிகளுடன் நின்றுவிடாமல், எதிர்காலத்திலும் இதுபோன்ற தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று மன்னார் புனித சவேரியார் பாடசாலைக்கும், ஒட்டுமொத்த மன்னார் மாவட்டத்திற்கும் மேலும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டார்.
​இந்தச் சிறப்பான நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகம் பெருமளவில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
SXBC Awarding Ceremoney20261 SXBC Awarding Ceremoney20262 SXBC Awarding Ceremoney20263
 
SXBC Awarding Ceremoney20264
FaLang translation system by Faboba