Print
7views
இலங்கையின் 50ஆவது தேசிய விளையாட்டு விழா – 2026 இன் ஒரு அங்கமாக நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில், 70–75 கிலோகிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த L.N.D. திருக்ஷி (Dhirukshi) அவர்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குறித்த வீராங்கனை பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாராட்டி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. க. கனகேஸ்வரன் அவர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் மன்னார் மாவட்டத்தின் திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இவ்வீராங்கனைக்கு மாவட்டச் செயலகம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளக கணக்காய்வாளர்,
பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
Awarding for BOxing winner Girl202611 Awarding for BOxing winner Girl202622 Awarding for BOxing winner Girl20263
 
Awarding for BOxing winner Girl20262 Awarding for BOxing winner Girl20265
FaLang translation system by Faboba