மன்னார் மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உத்தியோகத்தராகக் கடமையாற்றிய திருமதி J. ஹில்டா அவர்கள், பதவி உயர்வு பெற்று நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு நிர்வாக உத்தியோகத்தராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
இதனை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (16.11.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மன்னார் மாவட்ட செயலகத்தில் அவர் ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்பட்டுப் பாராட்டப்பட்டதுடன், அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

